Posts

பொருளடக்கம் - பாகம் 2

      முன்னுரை                                                    1 69 மொகலாயர்கள் - பாபர்                         614 70 மொகலாயர்கள் - ஹூமாயூன்           630 71 மொகலாயர்கள் - அக்பர்                      641 72 மொகலாயர்கள் - ஜஹாங்கிர்        ‌   663  73 சலீம் - அனார்கலி                                   683 74 மொகலாயர்கள் - ஷாஜஹான்           688 75 மொகலாயர்கள் - ஒளரங்கசீப்            709 76 மொகலாயர்கள் - ஒளரங்கசீப்பிற்கு  பின்னர்                       ...

பொருளடக்கம் - பாகம் 1

 01 முன்னுரை                                                    1 02 சாணக்கியர்                                                  4 03 சந்திரகுப்த மெளரியர்                               7 04 பிந்துசாரர்                                     ‌              ‌‌  9 05 அசோகர்                                                      ‌‌ 11 06 மெளரிய பேரரசு (அசோகருக்கு பின்)24 07 முற்கால பாண்டிய பேரரசு...

முன்னுரை

ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சரித்திரத்தின் மீது ஒரு ஈடுபாடு உண்டு. அதனால் சரித்திரம் சம்பந்தப்பட்ட நூல்கள் தான் அதிகம் என்னுடைய புத்தக அலமாரியில் இருக்கும். நண்பர் Nandakumar (Trichy)  நல்ல புத்தக வாசிப்பாளர். அவரிடம் நிறைய புத்தகங்கள் கேட்டுருந்தேன். பதிப்பகங்களில் தேடி வாங்கி அனுப்பி வைத்தார். அனுப்பி வைத்துவிட்டு படித்த புத்தகங்களின் விமர்சனத்தை எழுதுங்க என்று கோரிக்கை விடுத்தார். எனக்கு விமர்சனம் எழுத வராது வேண்டுமென்றால் இதுவரை படித்த புத்தகங்களின் இருந்து தொகுத்து பிரபலமான அரசர்களை பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்‌ என்று சொன்னேன். அப்படி சாணக்யரில் ஆரம்பித்து அசோகர் போனது. மெல்ல அந்த வம்சம் எப்படி ஆரம்பித்தது அதன் முடிவு எப்படியானது என்று சேர்த்து எழுதலாம் என்று ஆரம்பித்து எழுத ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக பல அரசுகள் தொடர்ந்து ஒவ்வொரு அரசுகளை பற்றி படித்தவற்றையும் கூகுளில் தேடியவற்றையும் சேர்த்து எழுதியுள்ளேன். தேட தேட விஷயங்கள் ஊற்று போல ஒன்றன்பின் ஒன்றாக கிடைத்தது. அக்பர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் லக்கிபாக் என்ற பெயரில் 1 லட்சம் மாமரங்கள்  கொண்...

100) இந்திய சுதந்திர போராட்டம் (காந்தியின் வருகைக்கு பின்னர் முதல் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை)

Image
இந்திய சுதந்திர போராட்டம் : (காந்தியின் இந்திய வருகைக்கு பின்னர் முதல் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை) முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கி.பி.1915ல் தென்னாப்பிரிக்காவில் இந்தியா திரும்பினார் காந்தி. தென்னாப்பிரிக்கா போராட்டங்களில் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த கோபாலகிருஷ்ண கோகலே யின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை பாரீஸில் சந்திக்க முதலில் லண்டன் சென்றவர் முதல் உலகப்போர் ஆரம்பித்த காரணத்தால் லண்டனிலையே இருக்க வேண்டியதாயிற்று. பின்னர் பம்பாய் திரும்பியவுடன் பம்பாய்யின் கவர்னர் சர் வெல்லிங்டன் காந்தியை சந்திக்க விருப்பப்படவே அவரை சந்தித்தார். பின்னர் பூனாவுக்கு சென்று கோகலேவை சந்தித்தார். குஜராத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைக்க விருப்பப்படுவதாக அவரிடம் கூற அவர் இந்தியா முழுவதும் ஒரு ஆண்டு சுற்றுப்பயணம் செய்து வரும்படி கூற அவ்வாறே பயணப்பட்ட அவர் கல்கத்தாவில் தாகூரை சாந்தி நிகேதனில் சந்தித்த போது கோகலேவின் மரணச் செய்தி அறிந்து பூனா திரும்பினார். கி.பி.1916 ஏப்ரலில் சென்னை வந்த அவர் தென்னாப்பிரிக்காவில் உயிர் தியாகம் செய்த வள்ளியம்மையின் ஊரான தில்லையாடிக்கு சென்று தமிழர்கள் நாகப்பன்...

104) சுதேச சமஸ்தானத்தின் இணைப்பு

Image
இந்திய சுதேச சமஸ்தானங்கள் இணைப்பு இந்திய சுதந்திரம் பெற்ற சமயத்தில் இரண்டு விதமான சமஸ்தானங்கள் இருந்தது. ஒன்று பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த சமஸ்தானங்கள். இவை ஆட்சி மாறும்போது இந்தியாவின் பகுதிகளாகி விட்டது. இன்னொன்று சுதேசி சமஸ்தானங்கள். இவர்கள் உள்நாட்டு முடிவுகளை தாங்களே எடுக்கும் அதிகாரம் பெற்று இருந்தாலும் பாதுகாப்புக்காக மற்றும் வெளி விவகாரங்களில் பிரிட்டிஷாரின் உதவியை எதிர்பார்த்து இருந்தனர். இவர்கள் இந்தியாவில் சேரலாமா? இல்லை பாகிஸ்தானில் சேரலாமா? அல்லது தனித்து சுதந்திர நாடாக தம்மை பிரகனப்படுத்திக் கொள்ளலாமா? என்ற யோசனையில் இருந்தன. இது போக பிரெஞ்ச் மற்றும் போர்ச்சுகல் அரசுகளின் குடியேற்றப் பகுதிகள் வேறு இருந்தது. இந்திய நிலப்பரப்புக்குள் இருக்கும் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த பணியினை நிறைவேற்ற 10 ஆண்டுகள் காலக்கெடு விதித்து அதற்கு பொறுப்பாக உள்துறை மற்றும் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் அமைச்சரவை செயலாளராக இருந்த வி.பி.மேனனும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் நூற்றுக்கணக்கான சுதந...

103) இந்திய பிரிவினைக்கு யார் காரணம்?

Image
இந்திய பிரிவினைக்கு யார் காரணம்? இந்திய நாடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிந்தது. இதற்கு யார் காரணம்? இந்து மதவாதமா? இல்லை முஸ்லீம் மதவாதமா? இல்லை தலைவர்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை இருந்தது தான் காரணமா? சிப்பாய் கலகத்தின் போது இரு சமுதாய மக்களும் இணைந்து போராடினார்கள் அப்புறம் ஏன் அவர்களுக்குள் இத்தனை ஆவேசம் கோபம்? சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்கு பின்பும் சுமார் 1 1/2 கோடி பேருக்கு மேல் இடம்பெயர்ந்த நிகழ்வுகளும் அதையொட்டிய வன்முறைகளும் கலவரங்களும் நடக்க காரணம் என்ன? ஒரு தாய் மக்களாக பழகி கொண்டிருந்த இரு சமுதாய மக்களை பிரித்தது யார்? அவர்களுக்குள் எழுந்த போட்டி பொறாமையை தூண்டி விட்டது யார்? சுதந்திரம் கிடைத்தது என்று சுதந்திர காற்றை முழுமையாக ஆனந்தமாக சுவாசிக்க முடியாமல் செய்த மதக்கலவரத்தை தூண்டியது யார்? அவர்களுக்குள் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த வெறுப்பு உணர்வா? அல்லது தலைவர்களின் சுயநலமா? கி.பி.12ம் நூற்றாண்டிலிருந்து கி.பி.19ம் நூற்றாண்டு வரை முஸ்லீம்களின் ஆட்சியில் கீழ் இந்தியாவின் பெரும்பகுதி இருந்தாலும் அங்காங்கே மதமாற்றங்கள் ந...