34) பிற்கால சேர பேரரசு
பிற்கால சேரர்கள் (கி.பி.598-1122) சங்ககால சேரர்களின் எல்லைகள் கொங்கணத்தின் எல்லைகளாகவே இருந்தது. ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால் தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாக போயின. பக்தி கால சேரர்கள் ஆட்சி முடிந்தவுடன் கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தை தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர். கேரளம் சோழதேசத்திற்கு மேற்கிலும் அரபிக் கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு கர்நாடகதேசத்திற்கு தெற்கிலும் அகன்று பரவியிருந்தது. கேரளம் வட கேரளம் தென் கேரளம் என இருபிரிவுகளாகவும் தென் கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும் வட கேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கி வருகிறது. சேரமான் மாக்கோதையார் சேர நாட்டை 12 பிரிவுகளாக பிரித்து 12 குறுநில மன்னர்களுக்கு பிரித்து கொடுத்ததாகவும் செய்திகள் உள்ளது. அந்த 12 பிரிவுகள் பின்வருமாறு: 1) நெடியிருப்பு - கோழிக்கோடு 2) ஆரங்கோடு - வள்ளுவநாடு 3) பெரும்படப்பு - கொச்சி 4) திருப்பாப்பூர் - திருவிதாங்கூர் 5) குறும்பியாதிரி - குறும்ப நாடு 6) புறநாட்டுக்...