Posts

Showing posts from April 17, 2022

21) குர்ஜர - பிரதிஹரர்கள் பேரரசு

Image
குர்ஜர - பிரதிஹரர்கள் பேரரசு (கி.பி.730-1036) : கி.பி. 7ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து (கி.பி.632) கி.பி.11ம் நூற்றாண்டு (கி.பி.1036) வரை வட இந்தியபகுதிகளை ஆண்டவர்கள் இவர்கள். இவர்களின் தலைநகரம் உஜ்ஜையினி மற்றும் கன்னோசி. சமஸ்கிருதமும் பிராகிருதமும் இவர்களின் ஆட்சியில் பேசப்பட்டது.  வரலாற்று ஆய்வாளர் குப்தர்கள் சாம்ராஜ்யத்திற்கு பிறகு மத்திய ஆசியாவிலிருந்து வந்து இன்றைய இராஜஸ்தானில் குடியேறியவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக இராணுவபலம் பெற்றனர். ஹர்ஷவர்த்தனரோடு முடிந்த புஷ்யபூதி வம்சம் அழிவுக்கு பின் நிறைய இராஜ்யங்கள் செழிக்க ஆரம்பித்தது. அப்படி ஆரம்பித்த சாம்ராஜ்யங்களுள் ஒன்று தான் குர்ஜரா-பிரதிஹரா அரசு. சாளுக்கியர்கள், குர்ஜரா-பிரதிஹரா, பரமரர்கள், சாம்ணர்கள் ஆகியவை நான்கு குணங்களும் அக்னிகுலங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நான்கு இராஜ்புத்ர வம்சங்களும் வெளியே இருந்து வரும் அன்னியர்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. பிரதிஹரா என்பதற்கு "வாசல் காப்பான்" என்று அர்த்தம். குர்ஜரா என்ற பெயரிலிருந்து தான் இன்றைய குஜராத் பெயர் உருவாயிற்று. சில வரலாற்று ஆய்வாளர்கள் இவர்கள் வெள்ளை நிறமுடைய ...

20) விஷ்ணுகுந்தின பேரரசு (அல்லது) வினுகொண்டா

Image
விஷ்ணுகுந்தினர் அரசு (கி.பி.420-621) : விஷ்ணுகுந்தினப்பேரரசு தக்காணபீடபூமி, ஒடிசா மற்றும் ஆந்திரப்பகுதிகளை ஆட்சி புரிந்த கி.பி.420 முதல் கி.பி.624 வரை ஆண்டது. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர்களின் காலத்தில் சமஸ்கிருதமும் நன்கு வளர்ந்திருந்தது. சிவன் கோயில்கள் நிறைய இவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. உண்டவல்லி, பைவரகொண்டா மற்றும் பெஜவடா குகைக் கோயில்கள் இவர்களின் ஆட்சிகாலத்தில் தான் உருவாக்கப்பட்டது.  கி.பி. 420ல் இந்திரவர்மன் உருவாக்கிய பேரரசு கி.பி.621ல் இரண்டாம் கோவிந்தவர்மனுடன் முடிந்தது. விஷ்ணு குந்தினர்களின் பேரரசை முடித்து வைத்த சாளுக்கியர்களின் இரண்டாம் புலிகேசி அதற்கு தன் தம்பி குப்ஜா விஷ்ணுவர்த்தனாவை அப்பகுதிகளுக்கு ஆளுநராக்கினார். அந்த தம்பி குப்ஜா விஷ்ணுவர்த்தனா தான் கி.பி.624ல் கீழை சாளுக்கியர்கள் வம்சாவளியை (வேங்கி சாளுக்கியர்கள்) தொடங்கி வைத்தது வரலாறு. இந்திரவர்மன் ( நான்காம் நூற்றாண்டு இறுதி - கி.பி.420(உறுதியில்லை)) வாகதகர்களின் ஆட்சியின் கீழ் சிற்றரசாக இருந்த இவர் இன்றைய தெலுங்கானா மாவட்டத்திலுள்ள நல்கொண்டா மாவட்டத்திலுள்ள இந்திரபாலபுரம் ஊரை தலைநகராக கொண்டு ஆட்சியை ...

19) வாகதகர்கள் பேரரசு

Image
வாகதகர்கள் அரசு (கி.பி.250-519) : கி.பி. 3ம் நூற்றாண்டில் மத்தியில் சாதவாகனர்களின் வீழ்ச்சியுறும் நேரத்தில் எழுச்சி பெற்ற இவர்கள் கி.பி. 5 நூற்றாண்டு இறுதிவரை ஆட்சி புரிந்தனர். சுமார் 250 வருடங்கள் விந்தியசக்தியில் ஆரம்பித்து ஹரிசேனாவுடன் முடிவடைந்தது. இவர்கள் பிராமணர்கள் குலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தக்காண பீடபூமியில் ஆரம்பித்து தெற்கே மால்வா வரையும்,வடக்கே குஜராத் வரையும், தெற்கே துங்கபத்திரா நதி வரையும் மேற்கே இன்றைய சத்தீஸ்கர் மாநிலம் வரையும் இவர்களின் ஆட்சி இருந்தது. குப்தர்களின் சமகாலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்களின் தலைநகரம் வாத்சாகுல்மா (தற்போதைய பெயர் வாசிம்). இவர்களின் அரசில் சமஸ்கிருதமும், பிராகிருதமும் பேசப்பட்டது. இவர்கள் இந்துக்களாக இருந்தாலும் புத்த,சமண மதங்களையும் ஆதரித்தனர். அஜந்தா குகைகோயில்கள் இவர்களின் அரசர் ஹரிசேனா காலத்தில் கட்டப்பட்டது. இவர்களின் காலத்தில் கலை, இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. இரண்டாம் சந்திரகுப்தர் தன் மகளை வாகதக அரச குடும்பத்திலுள்ள இரண்டாம் ருத்ரசேனாவிற்கு மணம்முடித்து வைத்ததாகவும் குறிப்புகள் உள்ளது. குப்தர்கள...

18) மேலை சாளுக்கிய பேரரசு (கல்யாணி சாளுக்கியர்கள்)

Image
  கல்யாணி சாளுக்கியர்கள் ‌(கி.பி.973-1189) : மேற்கு (மேலை) சாளுக்கியர்கள் அரசு மீண்டும் 220 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கல்யாணியை (இன்றைய பசவ கல்யாண்) தலைநகரமாக கொண்டு இரண்டாம் தைலபாவினால் கல்யாணி சாளுக்கியர்கள் அரசு என்ற பெயரில் உதயமாயிற்று.  இரண்டாம் தைலபா (கி.பி.973-997) : இவர் இரண்டாவது முறையாக மேலை சாளுக்கிய வம்சத்தை கல்யாணியை தலைநகராக கொண்டு ஆரம்பித்தார். இராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணாவை தோற்கடித்து மீண்டும் சாளுக்கிய சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டினார். இவருக்கு ஆகவமல்லா, நுர்மதி தைலபா, சத்யாஸ்ரய குலதிலகா என்ற பட்டப்பெயர்களினாலும் அழைக்கப்படுகிறார். இவர் ஐந்தாம் இந்திரனை தோற்கடித்து இராஷ்டிரகூடர்களின் வலிமையை குறைத்தார். மேலும் கோதாவரி கரையோரம் பாஞ்சலதேவனையும் வென்றார். கி.பி.980ல் உத்தமசோழரையும் வென்றார். 24 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இவர் கி.பி.997ல் மறைந்தார். சத்யாஸ்ரயா (கி.பி.997-1008) : இரண்டாம் தைலப்பாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த அவர் மகன் சத்யாஸ்ரயாவை சட்டிகா என்றழைப்பர். சோழர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததால் கீழை சாளுக்கிய வேங்கி மீது கி.பி.1006ல் படையெ...

17) கீழை சாளுக்கிய பேரரசு (வேங்கி சாளுக்கியர்கள்)

Image
கீழை சாளுக்கிய பேரரசு (கி.பி.624-1070) :  இரண்டாம் புலிகேசி விஷ்ணுகுந்தினர்களிடமிருந்து கி.பி.616ல் வேங்கியை கைப்பற்றி தன் தம்பியான குப்ஜா விஷ்ணுவர்த்தனாவை அதற்கு பொறுப்பாக நியமித்தார். கி.பி.624ல் வேங்கியை தன்னாட்சி பெற்ற அரசாக அறிவித்து கீழை சாளுக்கியர்கள் என்ற மரபை ஆரம்பித்து வைத்தார். குப்ஜா விஷ்ணுவர்த்தனா (கி.பி.624-641) : ஆந்திராவின் கடற்கரை பிரதேசங்கள் மற்றும் விஷ்ணுகுந்தினர்கள் அரசின் சிறு பகுதிகளை எல்லாம் பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மனிட்ம் இருந்து கங்க மன்னன் துணையுடன் கி.பி.616ல் கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி அதன் ஆளுநராக தன் தம்பி குப்ஜா விஷ்ணுவர்த்தனாவை நியமித்தார். அவர் கி.பி. 624ல் வேங்கியை தலைநகராக கொண்டு மேலை சாளுக்கியரிடமிருந்து தன்னாட்சி பெற்ற அரசாக கீழை சாளுக்கியர்கள் (வேங்கி சாளுக்கியர்கள்) என்ற வம்சத்தை ஏற்படுத்தினார். இரண்டாம் புலிகேசி மறைவுக்கு பின்னர் இது தனி பேரரசாக ஆகியது. இவர் தனது ஆட்சியை நெல்லூர் முதல் விசாகப்பட்டினம் வரை விரிவாக்கினார். இவர்களது கீழை சாளுக்கிய அரசு 5 நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்தது. தமிழகத்தின் சோழர்களுடன் மணவினை தொடர்பு கொண்டு இருந்த...

16) மேலை சாளுக்கிய (பாதாமி சாளுக்கியர்கள்) பேரரசு

Image
பாதாமி சாளுக்கியர்கள் (கி.பி.543-753) : சாளுக்கியர்கள் என்று சொல்லும்போதே எல்லாருக்கும் உடனே நினைவுக்கு வரும் பெயர் இரண்டாம் புலிகேசி. பொலே கேசி என்று கன்னடத்தில் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட பெயர் புலிகேசி என்றே வழங்கப்படலாயிற்று. அசகாயசூரர் போரில் வல்லவர் இவர். இவரின் வம்சம் எப்படி தோன்றியது?  சாதவாகனர்களின் கீழே சிற்றரசர்களாக இருந்தவர்கள் சாதவாகனப்பேரரசின் வீழ்ச்சிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுச்சி பெறலாயினர். சரித்திரத்தை பார்த்தால் 3 வகையான சாளுக்கியர்கள் என்று வகைகளில் பிரிக்கலாம். பாதாமி (வாதாபி) சாளுக்கியர்கள், மேலை சாளுக்கியர்கள் (கல்யாணி), கீழை (வேங்கி) சாளுக்கியர்கள் என்று 3 வகையாக பிரிப்பர். இன்னொன்று வகை இருக்கிறது அது சாளுக்கிய சோழர்கள். இராஜராஜனின் மகளான குந்தவை-விமலாதித்தன் (வேங்கி) வம்சத்தில் வந்த முதலாம் குலோத்துங்கன் இராஜேந்திரனின் மகனான வீரராஜேந்திரனின் (கிபி.1069) மறைவுக்கு பின் கி.பி. 1070 ல் ஆட்சிக்கு ஏறி மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி.1257)ல் சடையவர்மன் சுந்தரபாண்டியனால் வீழ்த்தப்படும் வரை தொடர்ந்தது வேறு கணக்கு. ஆனால் குலோத்துங்கன் முதல் 3ம் ராஜேந்திரன் வகை ...

15) புஷ்யபூதி (அல்லது) வர்த்தனா பேரரசு

Image
வர்ததனா (புஷ்யபூதி) அரசு (கி.பி.500-647) : புஷ்யபூதி வம்சம் இதை சிலர் புஷ்பபூதி வம்சம் என்று கூட உச்சரிப்பில் சொல்லுவார்கள். இது என்னடா புது அரச வம்சமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீங்களா? ஹர்ஷ வர்த்தனா (ஹர்ஷர்) என்ற பேரை கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. அவர் இந்த வம்சத்தில் வந்தவர் தான். ஆனால் அவரின் 40 ஆண்டுகால அரசுக்கு பின் அந்த அரசு அழிவுற்றது. இந்த வம்சத்தின் கடைசி அரசரே ஹர்ஷவர்த்தனர் தான். ஆரம்பம் என்று பார்த்தால் நரவரத்தனாவில் (கி.பி.500-525)ல் ஆரம்பித்து ஹர்ஷவர்த்தனா(கி.பி.606-647)வுடன் முடிவுற்றது. ஆரம்பத்தில் இவர்களது குலத்தை நிறுவியவர் புஷ்யபூதி. குப்தர்களின் படைதளபதிகளாக புஷ்யபூதிகள் பணியாற்றி வந்தனர். தங்களை வர்த்தனர்கள் என்ற பெயரால் அழைத்துக் கொண்டனர். ஹூணர்களின் படையெடுப்புக்கு பின்னர் குப்தர்கள் அரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த நேரத்தில் தங்களை சிற்றரசாக அறிவித்து கொண்டனர். இன்றைய அரியானா மாநிலத்தில் குருஷேத்திரா மாவட்டத்திலுள்ள தானேஷ்வர் நகரை தலைநகராக கொண்டு சிற்றரசாக (கி.பி.500-525) ஆட்சியை தொடங்கினார் நரவர்த்தனா. அவருக்கு பின்னர் முதலாம் ராஜ்யவர்த்தனா(கி.பி.525-555) அவரு...

14) கதம்பர்கள் பேரரசு

Image
கூப்பன்கள் அரசு (கி.பி.345-540) : கதம்பர்கள் வட கர்நாடகாவை பூர்விகமாக கொண்டு வனவாசியை (பனவாசி என்பது தற்போதைய பெயர்) தலைநகராக கொண்டு கி.பி.345-525 வரை ஆண்டனர். வட கர்நாடகா மற்றும் கொங்கணி பிரதேசங்களை ஆண்ட இவர்கள் பிராமண மரபை சேர்ந்தவர்கள். இவர்கள் கன்னடமும் சமஸ்கிருதமும் பேசினார்கள். கதம்பர்கள் வம்சத்தை தோற்றுவித்தவர் மயூரசர்மன்.  மயூரசர்மன் (கி.பி.345-365) : வட கர்நாடகாவிலுள்ள தலகுந்தாவை பூர்வீகமாக கொண்ட வைதீக பிராமணர். இவர் தனது குருவும் தாத்தாவுமான வீரசர்மாவுடன் காஞ்சிக்கு படிக்க வந்தார். பல்லவ இளவரசி வருவதால் வழியை விட்டு விலகி செல்ல குதிரையில் இருந்த பல்லவ காவலாளியால் கீழே மிதித்து தள்ளி அவமானப்படுத்தப்பட்டார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்காக காஞ்சி கடிகையின் தலைவரை சந்தித்து முறையிட்டும் அவர் அரசரின் விஷயத்தில் தலையிட மறுக்கவே தனது அவமானத்திற்காக கடிகையின் படிப்பை துறந்து வாளை கையிலெடுத்தார். இந்த  நிகழ்வை தலகுந்தா கல்வெட்டு தெளிவாக விவரிக்கிறது. மயூரசர்மாவின் கோபம் இன்றைய நவீன கர்நாடகத்தின் பகுதிகளை அடக்கிய முதல் இராஜ்ஜியமாக கதம்பர்கள் இராஜ்ஜியம் உருவானது. அந்தணனாக மயூரசர...

13) பல்லவ பேரரசு

Image
பல்லவப்பேரரசு (கி.பி.250-900) : பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? தமிழகத்தில் வடபகுதியை சுமார் 650 ஆண்டுகாலம் ஆண்ட இவர்களின் தாய்மொழி எது? இன்று பல்லன் என்று கேலி சொல்லாக அழைக்கப்படும் நீண்ட பற்கள் கொண்டவர்களாக பல்லவர்களின் மூதாதையர்கள் இருந்து இருக்கலாம். அதனால் பல்லன் என்று அழைக்கப்பட்டு மருவி பல்லவன் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம்.  பஹலவர்கள் என்ற இன்றைய பெர்ஷியா (பாரசீகம்) விலிருந்து வந்தவர்கள் என்பதால் பல்லவர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற வில்லியம் ஸ்மித்தின் வாதத்தை அவரே பின்னர் மறுத்து தென்னிந்தியாவை ஆண்ட சாதவாகனர்களின் பேரரசில் சிற்றரசர்களாக இருந்து பேரரசு மறைந்தவுடன் பல்லவர்கள் எழுச்சி பெற்று இருக்கலாம் என்றும் கூறுகிறார். தொண்டை நாட்டு பழங்குடிகள் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டிருந்த குறும்பர்கள். அவர்கள் பால் வியாபாரம் செய்து வந்ததால் பாலவர் (பால்+அவர்) என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி பல்லவர் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம். அதனால் இவர்கள் தொண்டை நாட்டு குறும்பர் இனத்தவரே என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். யாழ்ப்பாணம் தான் அவர்களின் பூர்விகம் என்றும்...