26) ராய் வம்ச ஆட்சி

ராய் வம்சம் (கி.பி.489-632)

ராய் வம்ச ஆட்சி இன்றைய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை சுமார் 15 1/2 லட்சம் கி.மீ பரப்பில் விரிந்து இருந்தது. கிழக்கில் காஷ்மீரும், மேற்கே மக்ரான் மற்றும் தபோல் (கராச்சி) துறைமுகமும், தெற்கில் சூரத் துறைமுகமும் வடக்கே கந்தஹார், பெர்டான் மற்றும் கிகானன் மலைகளும் இவ்வரசின் எல்லைகளாக இருந்தது. இவ்வரசு மொத்தம் 143 வருடங்களே நீடித்தது. இவர்களுக்கு பிறகு வந்த பிராஹ்மன்(சாச்) அரசே அரபுகளின் படையெடுப்புகளை தடுத்தது. 


இவர்களின் தலைநகரம் அரார். இவர்கள் ஹிந்து மற்றும் புத்த மதங்களை பின்பற்றினார்கள். ரஸித்தீன் காலிஃபத் உடனான கி.பி.632ல் மக்ரான் கடற்கரையில் நடந்த போரே இவர்களின் வீழ்ச்சிக்கு அடிகோலியது. "சாச் நாமா" என்ற தொகுப்புகளின் மூலம் எவ்வாறு இவ்வரசு அழிந்தது என்றும் புதிய பிராஹமன் அரசு தோன்றியது என்றும் அறியலாம். 

இவ்வரசர்கள் புத்த மதத்தை பின்பற்றினார்கள் என்றாலும் நிறைய சிவன் கோவில்களை இன்றைய சுக்கூர், (பாகிஸ்தான்) பகுதிகளில் இவர்களது தலைநகரமான அரார் அருகில் கட்டினார்கள். ராய் மற்றும் பிராஹமன் வம்ச வரலாறு முஸ்லீம்களின் தொகுப்பான ஷாநாமா மற்றும் சாச்நாமா  மூலமே அறியமுடிகிறது. இவர்கள் சித்தூரை ஆண்ட மோரி வம்சத்து இராஜபுத்திரர்களின் கிளையில் வந்தவர்கள் என்ற கருத்து உள்ளது. இவர்கள் தங்களது இராஜ்ஜியத்தை பிரித்து 4 ஆளுநர்களின் ஆட்சியில் கொடுத்தனர். அரசர் அரார் நகரிலிருந்து ஆட்சி புரிந்தார்.


இவர்களின் ஆட்சியாளர்கள் விவரம்

ராய் திவாஜி (தேவாதித்யா) :

இவரின் தலைமையில் தான் கிழக்கே மக்ரான் மேற்கே காஷ்மீர் தெற்கே காஷ்மீர் வடக்கே கந்தஹார் வரை பரவிற்று. இவரே ராய் வம்ச ஆட்சியை தலைநகர் அராரில் ஆரம்பித்து வைத்தார்.

முதலாம் ராய் சாஹிராஸ் :

முதலாம் ராய் சாஹஸி :

இரண்டாம் ராய் சாஹிராஸ் (ஶ்ரீ ஹர்ஷா) :

இவர் நீதி நேர்மைக்கும் மற்றும் வள்ளல் தன்மையும் உடையவர். மேலும் தனது சொத்துக்களை/பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவினார் என்று சாச்நாமா கூறுகிறது. இவரது ஆட்சியில் அரசு 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதற்கு தனியாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். தெற்கு பகுதி அரபிக்கடற்கரை முதல் லோஹனா மற்றும் சமானா வரையும் மத்திய பகுதி மக்ரான் எல்லைப்பகுதியான ஜங்கன் மற்றும் ரூஜாபன் வரையும், மூன்றாவது பகுதி மேற்கு சிந்து பகுதிகளான பாட்டியா, சாச்பூர் மற்றும் டெஹர்பூர் பகுதியாகவும் நான்காவது பகுதி முல்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகள் இணைந்ததாகவும் இருந்தது. இவர் நிம்ராஸ்ஸை ஆண்ட சசானீயா அரசரான கிர்மானின் படையெடுப்பில் தோற்று இறந்து போனார். இந்த போரினால் மக்ரான் மற்றும் சில பகுதிகள் பேரரசை விட்டு போயின.

ராய் இரண்டாம் சாஹஸி :

இவர் தான் கடைசி அரசர். இவரது ஆட்சியில் அரசு நல்ல பொருளாதார நிலையில் இருந்தது. இவர் தனது ஆட்சியில் தனது அமைச்சரவையில் இருந்தவர்களுடன் நல்ல நட்புறவுடன் சகோதர மனப்பான்மை கொண்டவராக இருந்தார். இவர் சோஹ்மன் தேவி என்பவரை மணந்தார். இவரது ஆட்சியில் குறைந்த அளவு ஞானம் கொண்ட சாச் என்பவர் (இவரே பின்னாளில் சாச் வம்சத்தை தோற்றுவித்தவர்) இவரது அமைச்சரான ராம் என்பவரின் கீழ் பணியில் சேர்ந்தார். அரசரின் நம்பிக்கையை பெற்று தனது நிலையை உயர்த்திக் கொண்டார். பின்னர் பிரதம அமைச்சர் ராம் மறைந்தவுடன் அரசர் சாச்சையே அமைச்சராக்கினார். இந்த நேரத்தில் இவருக்கு ராணியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. ராணி இவரிடம் தன்னை விருப்பம் இல்லாமல் குழந்தையாய் இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்தாக கூறினார். இருவரும் அரசனுக்கு தெரியாமல் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். திடிரென்று ஒரு நாள் அரசன் குழந்தையில்லாமல் இறந்து விட்டார். அமைச்சரும் ராணியும் இணைந்தே அரசரை கொன்று இருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் குறிப்பிடப்படவில்லை. சாச்நாமா விவரிப்பின்படி அரசர் திடீரென்று அகால மரணமடைந்தார். இவருக்கு என்று குழந்தைகள் இல்லாததால் உறவினர்கள் ராஜ்யத்தை அபகரித்து விடுவார்கள் என்று ராணி தேவி மந்திரி சாச்சிடம் கூறியதை அடுத்து அடுத்த வாரிசுரிமை கோரும் உறவினர்களை அரசர் இறந்த விவரம் வெளியே தெரிவதற்குள் அப்புறப்படுத்தி விட்டு பின்னரே அரசர் மரணமடைந்ததை தெரியப்படுத்தி மந்திரியே ஆட்சி பொறுப்பை ஏற்றார். அத்துடன் ராய் வம்ச ஆட்சி முடிந்து சாச் அல்லது பிராஹ்மன் வம்ச ஆட்சி தொடங்கியது. பின்னர் இவர் முந்தைய இராணி சோஹ்மன் தேவியை மணந்து கொண்டார். தனது அண்ணன் மறைந்த நிகழ்வை கேள்விப்பட்ட தம்பி ராணா மஹாரத் இதற்கு காரணமான அரசி மற்றும் அமைச்சரை பழிவாங்க முடிவு செய்தார். அண்ணன் மறைந்த ஆறு மாதங்களுக்கு பின் ராய் இரண்டாம் சாஹஸியின் தம்பியான சித்தூரின் ராணா மஹாரத் காம்பே (இன்றைய கம்பத்) வளைகுடாவில் போர் தொடுத்தார். போரில் ராணா மஹாரத் மாண்டு விட்டார் என்று சாச்நாமா குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மஹாரத் ராணா தம்பியாகவோ அல்லது உறவினராகவோ இருக்கவும் ஆட்சி மாறியவுடன் அதை கைப்பற்ற முனைந்தது வந்தவராக கூட இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

உதவிய நூல்கள் :

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு