27) சாச் (அல்லது) பிராஹ்மன் வம்ச ஆட்சி

சாச் வம்சம் (அல்லது) பிராஹ்மன் வம்சம் (கி.பி.632-724)

இன்றைய பாகிஸ்தானின் சிந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய பகுதிகள் உள்ளடக்கிய ராய் வம்ச ஆட்சியின் கடைசி அரசன் இரண்டாம் ராம் சாஹஸியின் மறைவுக்கு பின் அவரது மந்திரியாக இருந்த பிராமணரான சாச் ஆஃப் அலோர் என்பவர் ஆட்சிக்கு வந்து முந்தைய அரசரின் விதவை மனைவியான சோஹ்மன் தேவியை மணந்து கொண்டு சாச் அல்லது ப்ராஹ்மன் வம்சத்து ஆட்சியை ஆரம்பித்து வைத்தார். மேலும் மேர்வாரின் அரசனான இரண்டாம் ராய் சாஹஸியின் சகோதரரையும் காம்பே (கம்பத்) போரில் தோற்கடித்து கொன்றார். இந்த விவரங்கள் செளராஷ்டிராவின் சாச் நாமா மற்றும் அரபியர்களின் ஷாநாமா குறிப்புகளின் மூலம் அறியலாம். 


இவர்களின் இந்த இந்து வம்சத்து ஆட்சி தொடர்ச்சியாக உம்மத் காலிஃபாவால் படையெடுக்கப்பட்டது. காலிஃபா அப்துல் மாலிக் இபின் மார்வான் நிறைய படைகளை ஒதுக்கினார். ஆனால் அவரின் மரணத்தினால் அந்த முயற்சி தடங்கலாயிற்று. முகம்மது பின் காஸிம் தனது மகனான முதலாம் அல்-வாலித் தலைமையில் கி.பி.711ல் சிந்துவின் மீது படையெடுத்து சிந்து நதிக்கரையில் கடைசி பிராமண அரசன் ராஜா தாஹிர்ரை கொன்று பிராமண அரசுக்கு முடிவு கட்டினார்.

சாச் ஆஃப் அலோர் (கி.பி.632-671) :

இவர் ராய் வம்ச அரசனான இரண்டாம் ராய் சாஹஸியின் அமைச்சரவையில் இணைந்து அவரின் நன்மதிப்பை பெற்று பிரதம அமைச்சராக உயர்ந்தார். பின்னர் இவருக்கும் ராணியான சோஹ்மன் தேவிக்கும் முறையற்ற காதல் ஏற்ப்பட்டது. குழந்தை பருவத்திலையே திருமணம் செய்து கொடுப்பதாக கூறிய காரணத்தால ராணியின் காதலை ஏற்று அரசருக்கு தெரியாமல் காதலை வளர்த்தனர். ஒருநாள் அரசர் வாரிசின்றி இறந்து போகவே (இவரே அரசரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது) அரசருக்கு உறவினர்களை அப்புறப்படுத்தி பின்னர் அரசரின் மரணத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தி இடைப்பட்ட காலத்தில் அரசை கைப்பற்றி ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் முந்தைய அரசியை மணந்து கொண்டார். அண்ணனின் மரணத்தை கேள்விப்பட்ட சித்தூரை ஆண்ட தம்பியான ராணா மஹாரத் இவர்களை பழிவாங்க படையெடுத்து வந்தார். அவரை காம்பத் (காம்பே வளைகுடா) போரில் தோற்கடித்து கொன்று தனது ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார். இவருக்கு இரு மகன்கள் பிறந்தனர்.

சந்தர் (கி.பி.671-679)

முந்தையவரின் மகனான இவர்  அவருக்கு பின் பட்டத்து வந்தார்‌. 8 ஆண்டுகள் ஆண்ட இவர் மறைந்தவுடன் இவரது சகோதரரான ராஜா தாஹிர் சென் பட்டத்திற்கு வந்தார்.

ராஜா தாஹிர் சென் (கி.பி.679-712)

தனது அண்ணனின் மறைவுக்கு பின் தனது 16வது வயதில் பட்டத்துக்கு வந்தவர். இவர் சாச் ஆஃப் அலோர் மற்றும் ராணி சோஹ்மன் தேவிக்கு பிறந்த மகன். இன்றைய பாகிஸ்தான் பகுதியின் கடைசி இந்து அரசன் இவரே . கி.பி.711ல்  முகம்மது பின் காஸிம் என்ற தளபதியின் வழிகாட்டுதலில் வந்த படையுடன் சிந்து நதிக்கரையில் நடந்த போரில் கி.பி.712 ல் கொல்லப்பட்டார். இவர் இலங்கை அரசர்  உம்மத் காலிஃபாவுக்கு அனுப்பியிருந்த பரிசுப்பொருட்கள் அடங்கிய கப்பலை தாக்கி கொள்ளையிட்டதால் தான் கோபமுற்று இவரின் மேல் படையெடுத்தாக சாச்நாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவரின் உடலை போர்களத்திலையே விட்டுவிட்டு தலையை மட்டும் அன்றைய பஸாராவின் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தலையில்லாத உடலை மட்டும் அவரின் படைவீரர்கள் எரியூட்டினர். 

சாச்நாமாவில் இவரின் மனைவியான அரசி லாடி தேவி மற்றும் பெண் குழந்தைகளான சூர்யா,பிரேமலா மற்றும் ஜோதா ஆகியவர்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் மனைவியான ராணி 15000 படைவீரர்களுடன் ராவர் கோட்டையை கைப்பற்றிக் கொண்டு முகமது பின் காஸிம்க்கு மிகுந்த சவாலாக விளங்கினார். முகம்மது பின் காஸிம் ராவர் கோட்டையை உடைத்து முற்றிலும் நிர்மூலமாக்கி அவரை பிடிப்பதற்குள் அவர் தன்னை தானே தன்னுடன் மற்ற பெண்களுடன் ஜோஹர் (எரித்துகொள்ளுதல்) செய்துக்கொண்டார்.

ராஜா தாஹிர் சென் அரபுகளுடன் மோதுவதற்கு முன் பதிவு செய்த வார்த்தைகளாக சாச்நாமா சொல்லுவது. " நான் அரபுகளுடன் நேரடி யுத்தத்தில் பங்கு கொள்ள போகிறேன். என்னால் முடிந்தளவு அவர்களை அழிப்பேன். அதில் நான் தோற்று கொல்லப்பட்டாலும் எனது வீரமான போரை பற்றி அரேபியா மற்றும் இந்தியாவிலுள்ள மக்கள் பேசுவர். மற்ற அரசர்கள் சிந்துவின் ராஜா தாஹிர் சென் தனது நாட்டுக்காக எதிரிகளிடம் போரிட்டு தன் இன்னுயிரை இழந்தான் என்று வரலாறு பேசட்டும்" என்ன ஓரு வீரஉரை? இந்த மாவீரனின் மரணத்துடன் கி.பி.712ல் இன்றைய பாகிஸ்தானில் இருந்த இந்து ராஜ்யத்தின் வரலாறு முடிவுற ஆரம்பித்து கி.பி.724ல் முற்றிலும் அழிந்தது.

உதவிய நூல்கள் :

விக்கிபீடியா தகவல்கள் 

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு