58) விஜயநகர பேரரசு - துளுவ மரபு

துளுவ மரபு (கி.பி.1491-1570) 

துளுவ நரச நாயக்கன் (கி.பி.1491-1503)‌‌ : 

விஜயநகர பேரரசின் அரசனாக இருந்த சாளுவ நரசிம்ம தேவராயனிடம் இவரின் தந்தையான துளுவ ஈஸ்வரா நாயக்கன் சந்திரிகிரியின் தளபதியாக இருந்தவர். அவருக்கு பின் இவர் அந்த பதவியை வகித்தார். சாளுவ நரசிம்மரின் மறைவுக்கு பின்னர் அவரின் மகன் திம்ம  பூபாலன் குறுகிய காலத்திலையே தளபதி ஒருவரால் கொல்லப்பட்ட பின்னர் இளவயது சிறுவனான சாளுவ நரசிம்மரின் இரண்டாவது மகனான துளுவ நரச நாயக்கனை அரசராக்கினார். குழப்பமான நேரத்தில் திறமையாக பேரரசை நிர்வகித்தார். கி.பி.1496ல் தெற்கு நோக்கி படையெடுத்து திருச்சி தஞ்சை ஆளுநர்களை அடக்கினார். குமரி வரை பேரரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். கி.பி.1496ல் ஒரிசாவின் கஜபதி அரசன் பிரதாபருத்திரன் விஜயநகரத்தை தாக்கியதிலிருந்து நகரை வெற்றிகரமாக பாதுகாத்தார். பாமினி சுல்தானின் உதவிக்கு சென்று பீஜப்பூர் சுல்தானாகிய யூசுப் ஆதில்கானை வென்று ராய்ச்சூர் பகுதியை கைப்பற்றினார். இதனால் சமாதானம் பேச வருமாறு பிஜப்பூருக்கு அழைத்து யூசுப் ஆதில்கான் துளுவ நரச நாயக்கனையும் எழுபது அதிகாரிகளையும் கொலை செய்தான்.

வீர நரசிம்ம ராயன் (கி.பி.1503-1509) :

துளுவ நரச நாயக்கனை பிஜப்பூர் சுல்தான் கொலை செய்தபின்னர் அவரது மகனான வீர நரசிம்ம ராயன் தளபதி பதவிக்கு வந்தான். இவரின் காலத்தில் கி.பி.1505ல் பேரரசாக இருந்த இரண்டாம் நரசிம்ம ராயன் காவலில் வைக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். இதனால் வீர நரசிம்ம ராயன் தானே பேரரசாக முடிசூட்டிக் கொண்டு குழப்பம் விளைவித்த தலைவர்களை அடக்கினார். இவரின் ஆட்சியில் பிஜப்பூர் சுல்தானாக இருந்த யூசுப் ஆதில்கானை தோற்கடித்து அடோனி மற்றும் கர்நூல் பகுதிகளை விஜயநகரத்துடன் இணைத்தார். தெற்கு நோக்கி படையெடுக்க செல்லும்போது தனது தம்பியான கிருஷ்ண தேவ ராயனை தனக்கு பதில் ஆட்சியாளராக நியமித்தார். ஆனால் இந்த படையெடுப்பு வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இறக்கும் தருவாயில் தனது அமைச்சரான சாளுவ திம்மராசனை அழைத்து தனது எட்டு வயது மகனுக்கு ஆட்சியை கொடுக்குமாறும் தனது தம்பியான கிருஷ்ணதேவராயனின் கண்களை பிடுங்குமாறு உத்தரவிட்டதாகவும் ஆட்டுகண்களை காண்பித்து கிருஷ்ணதேவராயரை கொன்று விட்டதாக அமைச்சர் அவரை ஏமாற்றியதாகவும் கட்டுக்கதைகள் உள்ளது.ஆனால் உண்மையில் இவர் மற்றொரு தாயின் சகோதரரான தம்பி கிருஷ்ணதேவராயருடன் நல்ல நட்புறவே கொண்டிருந்தார். தெற்கு நோக்கி படையெடுத்து செல்லும் போது தம்பி கிருஷ்ண தேவராயரையே ஆட்சியாளராக நியமித்து சென்றது உதாரணம்.

கிருஷ்ண தேவ ராயன் (கி.பி.1509-1529) :

அண்ணனான துளுவ வீர நரசிம்ம ராயனுக்கு பின் ஆட்சிக்கு ஏறியவர். 


விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த மன்னனாக போற்றப்படுகிறார். இவர் ஆட்சிகாலத்தில் விஜயநகரத்துக்கு (ஹம்பி) அருகில் புறநகரில் தனது தாயின் நினைவாக அவர் பெயரிலையே "நாகலாபுரம்"என்ற பகுதியை கட்டினார். கி.பி.1509ல் பிஜப்பூர் சுல்தானுடன் நடந்த சண்டையில் யூசுப் ஆதில்கான் கொல்லப்பட்டதுடன் அவருடைய கோல்கொண்டா விஜயநகர பேரரசுவுடன் இணைக்கப்பட்டது. பாமினி சுல்தான் அரசுகளின் ஒற்றுமையின்மையை பயன்படுத்திக்கொண்டு பிதார், குல்பர்கா மற்றும் பிஜப்பூர் பகுதிகளை கைப்பற்றினார். பல உள்ளூர் பகுதிகளான கொண்டவீடு ரெட்டிகள்,புவனகிரி வேளமாக்களை அடக்கி கிருஷ்ணா நதிவரை ஆதிக்கத்தை ஏற்படுத்தினார். கி.பி.1512ல் ஸ்ரிரங்கபட்டிணத்து கங்கராஜாவை வென்று அதையும் அரசுடன் இணைத்துக்கொண்டார்.கி.பி.1520ல் ராய்சசூரை கைப்பற்றி பிஜப்பூர் சுல்தான்களை தோற்கடித்தார்.பிஜப்பூர் சுல்தான் உயிரை காப்பாற்ற தப்பி ஓடினார். பெல்காமை அடைந்து பிஜப்பூரை கைப்பற்றி அதை தரைமட்டமாக்கியதுடன் குல்பர்காவையும் விஜயநகர படைகள் அழித்தது. பின்னரே பிஜப்பூர் சுல்தான் உடன்பாட்டிற்கு வந்தார். 

கிருஷ்ணதேவராயர் நோயுற்று இருந்த சமயத்தில் கி.பி.1529ல் மதுரையில் நடந்த கிளர்ச்சிகளை அடக்க தளபதி நாகம நாயக்கரை அனுப்பினார். அவர் சென்று கிளர்ச்சிகளை அடக்கி நிர்வாகத்தை சரிசெய்து மதுரையை தானே ஆளத் தொடங்கினார். இதையறிந்த கிருஷ்ணதேவராயர் நாகமநாயக்கரின் மகனான விசுவநாத நாயக்கரை அனுப்பி தந்தையை கைது செய்து கொண்டுவர ஆணையிட்டார். அதன்படியே விசுவநாத நாயக்கர் தந்தையான நாகம நாயக்கரை கைது செய்து விஜயநகரத்துக்கு கொண்டு சென்றார். கிருஷ்ணதேவராயர் இவரது கடமையுணர்வையும் விசுவாசத்தையும் பாராட்டி நாகம நாயக்கரை மன்னித்து விசுவநாத நாயக்கருக்கே மதுரையை ஆள பணித்தார். விசுவநாத நாயக்கர்களிலிருந்து தொடங்கியது தான் மதுரையின் நாயக்கர்கள் வம்ச ஆட்சி. 


அச்சுத தேவ ராயன் (கி.பி.1529-1542)‌‌‌ :

கிருஷ்ணதேவராயருக்கு பின் ஆட்சியேறிய இவர் அவரின் ஒன்றுவிட்ட தம்பியாவர். இவரது காலத்தில் பேரரசின் நிலைமைகள் சரியில்லை. சிற்றரசர்களும் பகைவர்களும் அரசை வீழ்த்துவதற்கு எதிர்பார்த்து இருந்தனர். மேலும் கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலியராம ராயனை போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சதாசிவ ராயன் (கி.பி.1542-1570) :

அச்சுத தேவ ராயனின் மறைவுக்கு பின்பு அவரது இளவயது மருமகனான சதாசிவ ராயன் கிருஷ்ணதேவராயரின் மருமகனான அலிய ராமராயனை காப்பாளராக கொண்டு ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சியில் அலிய ராமராயனே அரசன் போல செயல்பட்டு வந்தார். கி.பி.1565ல் தக்காண சுல்தான்களுடன் தலைக்கோட்டை போரில் தோற்று பிடிபட்ட அலிய ராம ராயனின் தலையை வெட்டி கொன்றனர்.

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு